Friday, November 23, 2007

முதுமை

என் பாட்டிக்கு எழுபத்தி எட்டு வயதாகிறது...கடந்த மாதம் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்தபொழுது என் பாட்டியுடன் பேசிகொண்டிருந்தேன் ...அவர் என்னிடம் கூறினார் எனக்கு இத்தனை வயதாகிவிட்டது என்பது பல தருணங்களிலும் மறந்து விடுகிறது ....இப்பொழுதும் நான் இளமையாகவும் ஆரோகியமகவும் இருப்பதாக உணருகிறேன்...ஆனால் இளமையாக இருக்கும் பொழுது செய்துகொண்டிருந்த வேலைகளை செய்ய முயலும்பொழுது முடிவதில்லை ..மனம் இருந்தாலும் உடல் ஒத்துழைப்பதில்லை ....அத்தருணங்களில் மரணத்தை பாட்டி மனம் சிந்திக்கிறது ...மரணம் என் கண்ண முன்னே வந்து மறைகிறது....மரண நாள் வெகு அருகில் என்று மனம் என்னோடு கூறுகிறது....ஆனால் மறுநிமிடமே நான் மீண்டும் இளமையாக உணருகிறேன் ..இன்னும் பல வருடங்கள் இங்கே வாழ்வேன் என்றும் தோன்றுகிறது என்றெல்லாம் கூறி கொண்டிருந்தார்...அந்நேரம் என் மனமும் அதை குறித்து சிந்தித்தது ....அவர் கூறியதில் உள்ள உண்மை உறைத்தது...நானும் எனக்கு இதனி வயதாகிவிட்டது என்று ஒரு பொழுதும் சிந்திததில்லை ...சில குழந்தைகள் என்னை 'ஆன்றி' என்ற்றழைக்கும்போழுது மட்டுமே நான் 28 வயது நிரம்பிய பெண்மணி என்பது நினைவுக்கு வருகிறது ..நான் தொலைத்த குழந்தை பருவம் இளமை பருவம் பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்கள் எல்லாரும் நினைவுக்கு வருகிறார்கள் ...எல்லாம் தொலைந்து ஒரு software Engineer வாழ்க்கை மட்டும் யாதர்ர்தமை பாரமயி என்னுடன் உள்ளது ..
நானும் என் பாட்டியை போல மரண பயம் சூழும் ஒரு நாளுக்காக ..என் முதுமைக்காக வாழ்கிறேன் ...என் பாட்டிக்கு எனிடமவது மனம் திறந்து பேச முடிகிறது..ஆனால் என் முதுமையை நினைத்து இப்பொழுதே கவலை படுகிறேன் ...முதுமையில் உடன் இருக்க யாரும் இல்லாமல் தனிமைபடுதபடுவேன் என்று பயக்கிரேன் ....அத்தனிம்ய்யை எதிர்பார்த்து என் நாட்கள் இவ்வுலகத்தில் தொடரும்.......